Loading...

திண்டுக்கல் அருகே அமைதி அறக்கட்டளை சார்பில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ளக புகார் குழு கூட்டம்

A

Admin

September 22, 2026 • 02:27 PM

திண்டுக்கல் அருகே அமைதி அறக்கட்டளை சார்பில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ளக புகார் குழு கூட்டம்

திண்டுக்கல் அருகே அமைதி அறக்கட்டளை சார்பில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ளக புகார் குழு கூட்டம்

*திண்டுக்கல், செப்.23*

திண்டுக்கல் அமைதி அறக்கட்டளை சார்பில் தாடிக்கொம்பு அருகே உள்ள ரிதன் டெக்ஸ் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் உள்ளக புகார் குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு அறக்கட்டளையின் தலைவர் ரூபபாலன் தலைமை தாங்கினார். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குழு உறுப்பினரும், மேலாளருமான ஆ.சீனிவாசன் முன்னிலை வகித்தார். மனநல ஆலோசகர் சங்கீதா வரவேற்றார்.

இதில் சமூக நலன் பயிற்சி அலுவலர் பவித்ரா கருத்துரை வழங்கினார். பணியிட பாதுகாப்பு அலுவலர் ரேணுகாதேவி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

கூட்டத்தில், உள்ளக புகார் குழுவின் செயல்பாடுகள், விதிமுறைகள், புகார் அளிக்கும் முறைகள் குறித்து தொழிலாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் பணியிட பாதுகாப்பு தொடர்பான அவசர உதவி எண்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.

முடிவில் மனநல ஆலோசகர் திண்டுக்கல் நதியா நன்றி கூறினார்.

- Advertisement -