திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புழல் ஊராட்சி ஒன்றிய அழிஞ்சிவாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
திருவள்ளூர் தென்மேற்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட புழல் ஊராட்சி ஒன்றிய அழிஞ்சிவாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.
நான்கு வகுப்பறை கொண்ட கட்டிடம் சுமார் 72.68 லட்ச மதிப்பேட்டில் மாணவ மாணவிகள் பயன்படும் வகையில் இக்கட்டிடம் அமைந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் எம் எல் விஜய் பிரபு பள்ளி கட்டிட வளாகத்தை திறந்து வைத்து குத்து விளக்கேற்றி சிறப்பித்தார். சட்டமன்ற உறுப்பினருக்கு நாராயணன் தலைமை ஆசிரியர் பள்ளியின் சார்பில் சால்வை அணிவித்து மரியாதை செய்தார். பள்ளிபள்ளி மாணவ மாணவிகளின் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக வெற்றி கழக புழல் ஒன்றிய கழக செயலாளர் என் எஸ் மைக்கேல் என்ற ராஜன் சிறப்பாக செய்திருந்தார். மேலும் புழல் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு அதிகாரிகள் தமிழக வெற்றிக்கழக பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்,