Loading...

தேனியில் சர்வதேச முதியோர் தின விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் கேக் வெட்டி, கைத்தறி ஆடைகள் வழங்கி வாழ்த்து!

A

Admin

October 02, 2026 • 10:48 AM

தேனியில் சர்வதேச முதியோர் தின விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் கேக் வெட்டி, கைத்தறி ஆடைகள் வழங்கி வாழ்த்து!

தேனியில் சர்வதேச முதியோர் தின விழா: மாவட்ட ஆட்சித்தலைவர் கேக் வெட்டி, கைத்தறி ஆடைகள் வழங்கி வாழ்த்து!



அக் 03



தேனி மாவட்டம், தேனி வட்டம், கொடுவிலார்பட்டி ஊராட்சியில்

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் சர்வதேச முதியோர் தின விழா கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் தலைமை தாங்கினார்.

விழாவில், முதியோர்களைப் போற்றிச் சிறப்பிக்கும் வகையில் அவர்களது முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கித் தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டார். மேலும், விழாவில் பங்கேற்ற முதியோர்கள் ஒவ்வொருவருக்கும் கைத்தறி ஆடை அணிவித்து பொன்னாடை போர்த்திய ஆட்சித்தலைவர், அனைவரும் நல்ல உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து, சக்திசதன் பெண்கள் காப்பக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்த ஆட்சித்தலைவர், அங்கு தங்கியுள்ள முதியோர்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளையும் தேவைகளையும் அன்புடன் கேட்டறிந்தார். அவர்களின் கோரிக்கைகள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி விஷ்ணுபிரியா, சக்திசதன் பெண்கள் காப்பக கண்காணிப்பாளர் சந்தியா, ஊராட்சிச் செயலர் வேல்முருகன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

- Advertisement -