Loading...

தேனி மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் 157-ஆவது பிறந்த நாள் விழா

A

Admin

October 03, 2026 • 05:42 AM

தேனி மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் 157-ஆவது பிறந்த நாள் விழா

தேனி மாவட்டத்தில் அண்ணல் காந்தியடிகளின் 157-ஆவது பிறந்த நாள் விழா: தீபாவளி சிறப்பு கதர் தள்ளுபடி விற்பனையை தொடங்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன்!


அக் 05


அண்ணல் காந்தியடிகளின் 157-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தேனி-அல்லிநகரம் நகராட்சி காமராஜர் பேருந்து முனையத்தில் இயங்கி வரும் காதி கிராப்ட் அங்காடியில், காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு, குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் சார்பில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி கதர் விற்பனையை மாவட்ட ஆட்சியர் மரு.இரா.வைத்திநாதன் தொடங்கி வைத்தார்.

கிராமப்புற ஏழை எளிய நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2025-ஆம் ஆண்டு காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் ₹10.75 இலட்சத்திற்கு கதர் ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நடப்பு 2026-ஆம் ஆண்டில் ₹50 இலட்சம் மதிப்பிலான கதர் ரகங்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பருத்தி கதர், பாலியஸ்டர் மற்றும் பட்டு ரகங்களுக்கு 30% சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், விற்பனை இலக்கை அடையும் பொருட்டு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் தனியார் நிறுவனப் பணியாளர்களுக்கு எளிய தவணை கடன் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

அரசுப் பணியாளர்களும் பொதுமக்களும் அனைத்து கதர் அங்காடிகள் (Khadi Kraft) மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள தற்காலிக விற்பனை நிலையங்களில் கதர் ஆடைகளை பெருமளவில் வாங்கி, நெசவாளர்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லெ.பாண்டி, காதிகிராப்ட் மேலாளர் ஜோதி, மேற்பார்வையாளர் கண்ணன், நகர்நல அலுவலர் கவிப்ரியா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மற்றும் கதர் வாரியப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்

- Advertisement -