Loading...

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

A

Admin

October 27, 2026 • 12:48 PM

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

தேனி மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி! அக் 28 தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி பள்ளிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பங்கேற்பு அக்டோபர் 2026-ல் போடிநாயக்கனூர் ZKM மேல்நிலைப்பள்ளி (2,648 பேர்), இராஜதானி கள்ளர் மேல்நிலைப்பள்ளி (327 பேர்), மற்றும் தேவதானப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி (515 பேர்) என மொத்தம் 3,490 மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பெற்றனர். விழிப்புணர்வு விவரம் மது மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், விபத்துகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. தமிழ் மலர் கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. கலால் உதவி ஆணையர் பஞ்சாபகேசன், டி.எஸ்.பி. சீராளன், உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் மரு. சசிதீபா, சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

- Advertisement -