Loading...

தேனி மாவட்டத்தில் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

A

Admin

September 30, 2026 • 02:33 PM

தேனி மாவட்டத்தில் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

தேனி மாவட்டத்தில் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26.70 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன்!

செப் 31

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.இரா.வைத்திநாதன் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றும் நோக்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள், மாதாந்திர உதவித்தொகை, மூன்று சக்கர வாகனம், சக்கர நாற்காலி, காதுகேட்கும் கருவி, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி அளிக்கப்பட்ட 56 மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரடியாகப் பெற்றுக்கொண்டார். பெறப்பட்ட இம்மனுக்கள் மீது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் உரிய முறையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.
தனைத்தொடர்ந்து, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.26,70,800/- மதிப்பிலான செயற்கைக் கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கிச் சிறப்பித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கமலராஜன் உட்பட பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்

- Advertisement -