தொடர்மின்தடையில் அவதியுறும் மண்டலமாணிக்கம் பகுதி பொதுமக்கள்
தொடர்மின்தடையில் அவதியுறும் மண்டலமாணிக்கம் பகுதி பொதுமக்கள் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை கமுதி . ராமநாதபுரம் மாவட்டம் கமுதி துணைமின்நிலையத்தில் இருந்து சின்னஉடப்பங்குளம் மண்டலமாணிக்கம் கூடக்குளம்வழியாக வீரசோழன்னுக்கு மின்சப்பளை போவதாக தகவல் இது கடந்த இருமாதமாக செல்லும் வழியில் கறுவேல மரங்கள் உள்ளதால் அடிக்கடி பழுதடைந்து போய்விடுகின்றதாம் இதிலே உடப்பங்குளம் வரை தனியாக லயன் தந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர் இந்நிலையில் கடந்த 16-10-26 அன்று மாலை போன மின்சாரம் 17-10-26 இரவு 9-45 க்கு வந்ததாகவும் மறுபடியும் நேற்று மாலை போய் இன்று காலை 9 மணிக்கு மின்சாரம் வந்ததாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் இதனை பரமக்குடி EE அவர்கள் கூடுதல் கவனம் செலுத்தி கூடுதல் பணியாளர்களை அனுப்பி கமுதி துணை மின் நிலையத்தில் இருந்து பழுதுகளை நீக்கி தந்து மின்தடையால் தொடர்ந்து அவதியுற்று வரும் மரக்குளம் வலையபூக்குளம் கழுவன்பொட்டல் புதுக்குளம் மண்டலமாணிக்கம் பச்சேரி பகுதிகளில் தொடரும் இரவுமுழுவதும் ஆன மின்தடையை சரிசெய்து தரவேண்டுமாய் இந்தபகுதி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கும் மின்வாரியத்திற்கும் கோரிக்கை விடுத்துள்ளனர் மேலும் சிறு சாறல் விழுந்தால் கூட மின்சாரத்தை அமர்த்தி வைத்துவிட்டு காலையில் தருவதாகவும் இதுபற்றி பொதுமக்கள் அதிகாரிகளை தொடர்புகொண்டு கேட்டால் சரியான பதிலை தெரிவிக்க மறுக்கின்றனர் எனபொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்