பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை!
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை! பசும்பொன், அக். 28: பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜையை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்திற்கு நேரில் சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ராஜாராம் பாண்டியன், கடலாடி வட்டாரத் தலைவர் சுரேஷ் காந்தி, கமுதி வட்டாரத் தலைவர் வலம்புரி ஆதி, புவனேஸ்வரன், ரணசிங்கம் ராமச்சந்திரன், மாவீரன் வேலுச்சாமி, ராமநாதபுரம் துணைத் தலைவர், முதுகுளத்தூர் நகரச் செயலாளர் செய்யது மீரா உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். [6:17 pm, 27/10/2026] Madurai G Media: வெற்றிப் பாதை வழிகாட்டுதல் நிகழ்வு கீழக்கரையில் நடைபெற்றது ராமநாதபுரம் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹமீதியா ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கீழை சமூக நல அமைப்பு சார்பில்“வெற்றி பாதை” உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்த தெளிவான புரிதலை வழங்குவது இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருந்தது, இந்நிகழ்வில் பள்ளியின் தாளாளர் அனீஸ் அகமது முன்னிலை வகித்தார்,பள்ளி தலைமை ஆசிரியர் ஜவஹர் பாரூக் வரவேற்புரை நிகழ்த்தி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். மேலும் மாணவர்கள் உயர்கல்வி குறித்த இலக்குகளை சிறு வயதிலேயே அமைத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை அவர் வலியுறுத்தினார். வழக்கறிஞர் முஹம்மது நபீல் மற்றும் பைசல் வழங்கிய வழிகாட்டுதல் வழங்கி மாணவர்களை ஊக்குவித்தார்கள், நிகழ்ச்சியின் சிறப்பு பற்றி வழக்கறிஞர் முகம்மது இஸ்மாயில் உயர்கல்வி ஆலோசகர் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் வழிகாட்டுதல் வழங்கினார். உயர்கல்வி துறைகள், போட்டித் தேர்வுகள், கல்வி உதவித்தொகைகள், திறன் மேம்பாடு, இலக்கு நிர்ணயம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார். மாணவர்கள் ஆழ்ந்து கவனித்து கேட்டதுடன், பலரும் கல்வி தொடர்பான சந்தேகங்களை முன்வைத்து தெளிவுபெற்றனர். கேள்வி–பதில் நிகழ்ச்சி மாணவர்களின் சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கங்களை வழங்கினார்கள்.