பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா துணை ஜனாதிபதி கலந்துகொண்டு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார்
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா துணை ஜனாதிபதி கலந்துகொண்டு மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினார் ராமநாதபுரம் தேசியமும் தெய்வீகமும் இரு கண்களாகப் போற்றி வாழ்ந்த தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழா இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள திருக்கோயிலில் நடைபெற்றது இதில் இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார் உடன் தமிழக கவர்னர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.ராதாகிருஷ்ணன் உடனிருந்தனர் பின்னர் துணை துணை ஜனாதிபதி கூறுகையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் சுதந்திரப் போராட்டக் காலத்தில் மட்டுமல்ல, அதற்குப் பிறகும் தொடர்ந்து சமுதாயத்திற்காக உழைப்பதையே தன் வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடைய மனதில் இடம் பிடித்தது மட்டுமல்லாமல், அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு, தேசிய எழுச்சிக்கும் தமிழ் மண்ணிலே தெய்வீக எழுச்சிக்கும் தன் வாழ்நாள் முழுவதும் உழைத்தவர். அவருக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான அஞ்சலி என்பது, தமிழ் மண்ணில் தேசியத்தையும் , தெய்வீகத்தையும் என்றைக்கும் மங்காமல் பாதுகாப்பதுதான். தெய்வத் திருமகனார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் புகழ் வாழ்க! அவர் போற்றிய தேசியமும் தெய்வீகமும் என்றும் ஓங்குக! என்றார்