Loading...

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்ககவசம் பலத்த பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது கமுதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை

A

Admin

November 02, 2026 • 12:34 PM

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்ககவசம்  பலத்த பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது        கமுதி  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள  பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்ககவசம் பலத்த பாதுகாப்புடன் மதுரை வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது கமுதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன்னில் நடைபெற்ற பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நிறைவடைந்ததை அவருக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை வங்கி பெட்டகத்திற்கு மீண்டும் கொண்டு செல்லப்பட்டது. பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் லாக்கரில் இருந்து 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் சாத்தப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு குருபூஜையை முன்னிட்டு வங்கியிலிருந்து எடுத்து வரப்பட்ட தங்கக் கவசம் தேவர் நினைவிடத்தில் சாத்தப்பட்டு, சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. அரசு விழா மற்றும் குருபூஜை நிகழ்வுகளில் லட்சக்கணக்கான பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அக்.28 29 30 மூன்று நாட்கள் நடைபெற்ற குருபூஜை விழா அமைதியான முறையில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, 2-11-26 காலை நினைவிடப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில் தேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்கக் கவசம் முறைப்படி களையப்பட்டது. அதனைத் தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய காவலர்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் ஆயுதம் தாங்கிய பலத்த போலீஸ் பாதுகாப்பு வாகனங்களின் அணிவகுப்புடன் தங்கக் கவசம் மதுரையில் உள்ள வங்கிக்கு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டு, மீண்டும் லாக்கரில் வைக்கப்பட்டது.

- Advertisement -