Loading...

பைக்கில் பெண்ணிடம் சங்கிலிகளை பறித்த 4 பேர்கைது

A

Admin

October 04, 2026 • 05:14 PM

பைக்கில் பெண்ணிடம் சங்கிலிகளை பறித்த 4 பேர்கைது

பைக்கில் பெண்ணிடம் சங்கிலிகளை பறித்த 4 பேர்கைது

3 பவுன்நகை மீட்பு


ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மணலூர் விலக்கு ரோடு பகுதியில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெண்ணை இருசக்கர வாகனங்களில் வந்த நபர்கள் வழிமறித்து பிளேடால் காயம் ஏற்படுத்தி அவர் அணிந்திருந்த தங்க சங்கிலிகளை பறித்துச்சென்றனர் இந்த சம்பவம் தொடர்பாக அபிராமம் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ் உத்தரவின்பேரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள CCTV பதிவுகள் சேகரிக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது அதன் அடிப்படையில் சம்பவத்தில் தொடர்புடைய. 4 நபர்கள் கைது செய்ப்பட்டுள்ளனர் சக்திவேல்(18) ஜெயகிருஷ்ணன் (22) நாக முனீஷ்வரன் (26) குணா (21) மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய மற்றொரு நபரை தேடிவருகின்றனர் சம்பவம் நடைபெற்று 24 மணிநேரத்திற்குள் 4 நபர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 3 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர்

- Advertisement -