Loading...

பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் விழா

A

Admin

October 21, 2026 • 03:51 AM

பொள்ளாச்சி  கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் விழா

பொள்ளாச்சி
கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக்.மேல் நிலைப்பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் விழா


பொள்ளாச்சி அக் 21
கோவை மாவட்டம்
பொள்ளாச்சியில் உள்ள
கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு
இப்பள்ளியின் தாளாளர் ஆர்.வி.எஸ். மாரிமுத்து, செயலாளர்
எஸ்.டி.ரவிச்சந்திரன்,
ஆகியோர் தலைமையில்
பள்ளியின் முதல்வர் டாக்டர் ஆர்.பிரகாஷ் மற்றும்
பள்ளியின் அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில்
வித்யாரம்பம் விழா பாரம்பரிய முறைப்படி
வெகு சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து
கல்விக்கு உகந்த நன்னாளாகக் கருதப்படும் விஜயதசமி தினத்தில், புதிதாக பள்ளியில் சேர்ந்த மழலைச் செல்வங்களின் கல்விப் பயணத்தை இனிதே தொடங்கி வைக்கும் வகையில் வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் தொடக்கமாக இறைவழிபாடு மற்றும் சரஸ்வதி பூஜையும். தொடர்ந்து குழந்தைகளுக்கு பாரம்பரிய முறைப்படி அரிசியில் "அ" என்ற முதல் எழுத்தை எழுத வைத்து புதிய மாணவர்களின் சேர்க்கை கல்விப் பயணம் இனிதே தொடங்கி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக
பள்ளியின் முதல்வர் பிரகாஷ் பேசிய போது பெற்றோர்களையும் குழந்தைகளையும் வரவேற்று, கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து. மாணவர்களின் அறிவாற்றல், படைப்பாற்றல், தன்னம்பிக்கை, ஒழுக்கம் மற்றும் தனித்திறன்களை வளர்த்து, கொண்டு சிறந்த ஆளுமைகளாக உருவாக்குவதே நமது பள்ளியின் நோக்கமாகும் என்றும்
புதிதாக கல்விப் பயணத்தைத் தொடங்கிய மழலைச் செல்வங்களுக்கு நல் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து, கல்வியிலும் வாழ்விலும் சிறந்து விளங்க வேண்டும் எனவும்

மேலும் கல்வியுடன் விளையாட்டு, யோகா, தியானம், கலை மற்றும் பல்வேறு தனித்திறன் மேம்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் பள்ளியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
அதன் பின்னர்
நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.இந்த விழாவில் பள்ளியின் அறங்காவலர்கள், நிர்வாகத்தினர், ஆசிரியர் பெருமக்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

- Advertisement -