Loading...

போகலூர் யூனியனில் எட்டிவயல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

A

Admin

October 03, 2026 • 04:07 AM

போகலூர் யூனியனில் எட்டிவயல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

போகலூர் யூனியனில் எட்டிவயல் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்


பிடிஓ ஜெயஆனந்தன் அரசு வழங்கி வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்!


போகலூர், அக்.3-

ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஊராட்சி ஒன்றியம் எட்டிவயல் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஆணைகுடி கிராமத்தில் நடைபெற்றது. 

கிராம சபை கூட்டம் ஊர் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் உதவி திட்ட இயக்குனர் நீலா பாலகிருஷ்ணன், போகலூர் ஊராட்சி ஒன்றியம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஜெய ஆனந்தன் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டு அரசின் நலத்திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு அரசு செய்து வரும் பாதுகாப்பு பணிகள் மற்றும் விழிப்புணர்வு குறித்து தெளிவாக விளக்கி பேசினர்.

கூட்டத்தில் 2026-27ம் ஆண்டு மாற்றி அடைந்த பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்தில் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30 வரை உருவாக்கப்பட்ட மனித சக்தி நாட்கள் மேற்கொள்ளப்பட்ட செலவு மற்றும் 2026 -27 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட செலவு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. ஊரில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் மற்றும் பொது சேவைகள் குறித்து மக்கள் முடிவுகளை அறிந்து தீர்மானம் நிறைவேற்றுவது. ஜல்ஜீவன் திட்டம் அனைவருக்கும் கிடைத்திட வழிவகை செய்வது. குடிநீரை மாதத்திற்கு இருமுறை ஆய்வு செய்வது. அரசு கட்டடங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் வசதி ஏற்படுத்தி தருவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

ஊராட்சி செயலாளர் சரவணன் தீர்மானங்கள் வாசிக்க மக்கள் கரகோஷம் எழுப்பி நிறைவேற்ற ஒப்புதல் அளித்தனர். இந்த கிராம சபை கூட்டத்தில் விஏஓ ராம்குமார், ஆசிரியர் கவிதா உட்பட பலர் கலந்து கொண்டனர். முருகன் நன்றி கூறினார்.

- Advertisement -