போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்
போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்!
மதுரை அக் 19
மதுரை மாவட்டம் பாண்டியராஜபுரத்தில் உள்ள அரசு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலம்நடைபெற்றது
விழிப்புணர்வு ஊர்வலத்தை, ஸ்டார் குரு சாரிட்டபிள் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஸ்டார் குருதொடங்கி வைத்து, ஊர்வலத்திலும் பங்கேற்றார்
இந்த ஊர்வலத்தில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகள், போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி, “ஒழிப்போம், ஒழிப்போம், போதையை ஒழிப்போம்”, “மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு” என விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பிச் சென்றனர். இந்த ஊர்வலம் கிராம மக்களிடையே பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
மேலும், மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஸ்டார் குரு சிறப்புரையாற்றினார். அவரது உரையை மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கேட்டனர்.