Loading...

மதுரையில் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான 9 நாள் வனவாழ் பயிற்சி நிறைவு விழா: 299 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

A

Admin

October 18, 2026 • 01:57 PM

மதுரையில் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான 9 நாள் வனவாழ் பயிற்சி நிறைவு விழா: 299 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன

மதுரையில் பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான 9 நாள் வனவாழ் பயிற்சி நிறைவு விழா: 299 பேருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன!



மதுரை, அக்.19:
தமிழ்நாடு பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்களுக்கான 9 நாட்கள் கொண்ட வனவாழ் பயிற்சி நிறைவு விழா
மதுரை மாவட்டம், இடையப்பட்டியில் உள்ள காவல் பயிற்சிப் பள்ளியில் நடைபெற்றது.

இந்த பயிற்சியானது
கடந்த 10.10.2026 முதல் 18.10.2026 வரை 9 நாட்கள் நடைபெற்ற இந்த வனவாழ் பயிற்சியில், 234 ஆண் அதிகாரிகள் மற்றும் 65 பெண் அதிகாரிகள் என மொத்தம் 299 பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டு தங்களது பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

இந்த விழாவில், சத்தியமங்கலம் சிறப்பு இலக்குப்படை காவல் ஆய்வாளர் ஆர். மோகன்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து, பயிற்சியின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.அதன் தொடர்ச்சியாக பயிற்சியில் பங்கேற்ற அதிகாரிகள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். பயிற்சி காவல் உதவி ஆய்வாளர்களான எஸ்.சிவா (ஏஆர் 66), எல்.தினேஷ் (டிகே 144) மற்றும் செல்வி. எம்.ஆர்த்தி (டிகே 288) ஆகியோர் தங்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் மற்றும் சவால்களைப் பற்றி விவரித்துப் பேசினர்.
அதன் பின்னர் பயிற்சியை நிறைவு செய்த அதிகாரிகள் அனைவருக்கும் சான்றிதழ்களை வழங்கினர்.
விழாவில் மதுரை இடையப்பட்டி காவல் பயிற்சிப் பள்ளியின் துணை முதல்வர் எஸ். செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். *மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என். தேவநாதன் தலைமை உரையில் நீங்கள் காவல்* *நிலையங்களில் பணியாற்றும் காலங்களில் லஞ்சம் தவிர்த்து நேர்மையாக இருந்து பழகி விட்டால்* , *ஒரு காலகட்டத்தில் நான் நேர்மையான அதிகாரி என்ற எண்ணம் உங்களை கடைசி வரை வழி நடத்தும்* , *மேல் அதிகாரிகளிடம் உங்களைப் பற்றி ஒரு நற்பெயரை உருவாக்கும் என்று இளம்* *அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்*.

இந்த நிகழ்வில்
ஊமச்சிகுளம் உட்கோட்டா காவல் உதவி கண்காணிப்பாளர் செல்வி.தனு சிங்.
ஈரோடு சிறப்பு இலக்குப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர் சசிக்குமார்
ஆகியோர் நன்றியுரை வழங்கினார்கள்.
விழா இனிதே நிறைவு பெற்றது.

- Advertisement -