Loading...

மதுரையில் பழமை வாய்ந்த பள்ளியின் 73 வது ஆண்டு விழா சிறப்பாக நடந்தது

A

Admin

October 17, 2026 • 02:48 AM

மதுரையில் பழமை வாய்ந்த பள்ளியின் 73 வது ஆண்டு விழா சிறப்பாக நடந்தது

மதுரையில் பழமை வாய்ந்த பள்ளியின் 73 வது ஆண்டு விழா சிறப்பாக நடந்தது 


மதுரை அக் :17 


மதுரை காமராஜர் சாலையில் உள்ள நிர்மலா பெண்கள் மேல்நிலை பள்ளியின் 73 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோபிசன் படிப்பில் சிறந்து விளங்கிய மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார் இவ்விழாவில் கலந்து கொண்டவர்களை பள்ளியின் தாளாலர் 

அருட்சகோதரி வாசுகி வரவேற்று பேசினார் , ஆண்டு அறிக்கையை பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ஜோஸ்பின் ராணி

வாசித்தார் மற்றும் விழாவில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் தலைமை மண்டல மேலாளர் சம்பகேஷ்வர் பிரதான் ,மூத்த மேலாளர் வெற்றிவேல் , காமராஜர் கலைமன்றம் முத்தரசு , முன்னாள் பள்ளி மாணவி டாக்டர் மகாலட்சுமி , தொழில் முனைவோர் மோகன் , மனோஜ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர் 

இந்த விழாவில் ஆசிரியர் பெருமக்கள் 

பள்ளி மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழா முடிவில் பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது .

- Advertisement -