மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் தைலகாப்பு திருவிழா
மதுரை அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் தைலகாப்பு திருவிழா
மதுரை அக் 23
அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் தைல காப்பு திருவிழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இரவு தைலகாப்பு திருவிழா தொடங்குகியது இரவு 7:00 மணிக்கு மேல் 8:15 மணிக்குள் ஶ்ரீ சுந்தரவல்லி தாயார் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியாருடன் ஸ்ரீ கள்ளழகர் பரமபத நாதர் சேவை (அமர்ந்த திருக்கோலம்) நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் கள்ளழகர் பெருமாளுக்கு உற்சவம் தொடங்கிய பின் தொடர்ந்து மேட்டு கிருஷ்ண சன்னதியில் மாலை 6:00 மணிக்கு மேல் 8:00 மணிக்குள் ஶ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ கள்ளழகர் ஷீராப்திநாதர் சேவை (ஆனந்த சயன திருக்கோலத்தில் காட்சி தருகிறார் அதை தொடர்ந்து இன்று 23-ந்தேதி துவாதசி காலை காலை 6:30 மணிக்கு மேல் 7:35 மணியளவில் ஶ்ரீ கள்ளழகர் ஆஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஆளும் பல்லக்கில் இருப்பிடத்தில் இருந்து கள்ளழகர் பெருமாள் சிறப்பு அலங்காரத்துடன் சகல பரிவாரங்களுடன் நூபுர கங்கைக்கு அழகர்மலை நடைபாதை வழியாக செல்கிறார்.
நூபுர கங்கை செல்லும் வழியில் உள்ள அனுமார் தீர்த்தம், கருட தீர்த்த எல்லைகளில் பெருமாளுக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். தொடர்ந்து அங்கிருந்து புறப்பாடாகி நூபுர கங்கைக்கு காலை 10 மணிக்கு மேல் சென்று ராக்காயி அம்மன் கோவிலில் எழுந்தருளுவார். காலை 10:35 மணி முதல் 11:30 மணிக்குள் நிபுரகங்கை மாதவி மண்டபத்தில் பெருமாளுக்கு தைலம் சாத்துபடி திருவாராதனம் நடைபெறுகிறது
பிற்பகல் 12:30 மணி முதல் 3:30 மணி வரை ஸ்ரீ கள்ளழகர் நூபுர கங்கையில் தொட்டி திருமஞ்சனம் தீர்த்தவாரி நடைபெறுகிறது
பின்னர் மண்டபத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி ராஜாங்க திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிப்பார் பின்னர் மாலை 5:30 மணி முதல் 7:00 மணிக்குள் ஸ்ரீ கள்ளழகர் கனக தண்டியலில் எழுந்தருளி, நூபுர கங்கையிருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பெருமாள் வந்த வழியாகவே சென்று இருப்பிடம் சென்றடைகிறார். பின் பதினெட்டாம்படி கருப்பசாமிக்கு ஶ்ரீ பெருமாள் திருமாலை சமர்ப்பித்து இரவு 8:30 மணிக்குள் சுந்தரராஜ பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருள்கிறார்.