மதுரை சாய்ராம் வித்யாலயா பள்ளியின் 3 ஆம் ஆண்டு விழா.
மதுரை சாய்ராம் வித்யாலயா பள்ளியின் 3 ஆம் ஆண்டு விழா.
மதுரை அக்டோபர் 31.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் சாய்ராம் வித்யாலயா பள்ளியின் 3 ஆம் ஆண்டு விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது, இந்த விழாவில் பேராசிரியர் டாக்டர் திருஞான சம்பந்தம் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று விழாவை சிறப்பித்தார், மேலும் சாய்ராம் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி லக்ஷ்மி அவர்கள் மற்றும் தலைமை தொழில் மேலாளர் (சாய்ராம் கல்வி குழுமம்) திரு. சதீஷ் குமார் அவர்கள் மற்றும் பள்ளி மேலாளர், ஆசிரியர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பாக நடத்தினார்கள். பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் பங்கேற்றனர், பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ், விருது, பரிசு பொருட்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கும் சான்றிதழ், ஊக்கத்தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.