மதுரை திருமங்கலம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ வளைகாப்பு விழா
மதுரை திருமங்கலம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ வளைகாப்பு விழா!
மதுரை அக் 12
முதல்வர், ஜோசப் விஜய் நல்லாசியுடன், கள்ளிக்குடி பொன் வைரமுத்து மகாலில், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி கள்ளிக்குடி ஒன்றிய தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமத்துவ வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் கள்ளிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 150 கர்ப்பிணித் தாய்மார்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்குப் பட்டுச்சேலை, வளையல்கள் மற்றும் பழங்கள் அடங்கிய தாம்பூலம் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியைத் திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ஒன்றிய நிர்வாகிகள் எஸ்.பி. முத்துப்பாண்டி, எம்.என். முனியாண்டி, எம். முனியாண்டி, மணிகண்டன் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
திருமங்கலம் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகளான செந்தில்குமார், மருதுவெங்கடேஷ், வருண்சுந்தர், சரவணகுமார், துரைமுருகன், அலெக்ஸ், பிரகாஷ், அய்யனார், மணிகண்டன், பொண்ணுப்பாண்டி, ஜெய்கிருஷ்ணன், பிரபா,ஸ்ரீராம், சரவணன், சங்கர், வேலு மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.