Loading...

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

A

Admin

October 08, 2026 • 05:43 PM

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மதுரை அக்டோபர் ;09

மதுரை மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை வடக்கு வட்டம், ஆலாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், சங்கத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிர்க்கடன், கால்நடைக் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடனுதவிகள் மற்றும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், சங்கத்தில் செயல்பட்டு வரும் மினி ஏ.டி.எம். சேவை மற்றும் பிற வங்கிக் கணக்குகளுக்கான பரிவர்த்தனை வசதிகளையும் ஆய்வு செய்தார். பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் வழங்கப்படும் சேவைகளை விரைவாகவும் சிறப்பாகவும் வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TANFED) மதுரை உரம் மற்றும் விவசாயப் பொருட்கள் சில்லறை விற்பனை நிலையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்கள் மற்றும் வேளாண் இடுபொருட்களின் இருப்பு, விற்பனை மற்றும் விலை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். விவசாயிகளுக்குத் தேவையான உரங்கள் மற்றும் வேளாண் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகத்தில், தலைமையகக் கிளை மூலம் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் சார்பில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன் உதவித் திட்டத்தின் கீழ் ரூ.50,000 மதிப்பிலான காசோலையை டி.முருகேஸ்வரி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., வழங்கினார்.
இந்த ஆய்வில் மதுரை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செ.சேமா சரோமி, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர்/இணைப்பதிவாளர் க.வாஞ்சிநாதன், மதுரை மாவட்ட பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் இணைப்பதிவாளர் மேலாண்மை இயக்குநர் சு.மனோகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

- Advertisement -