மதுரை மாவட்ட, அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை சார்பில் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு
மதுரை மாவட்ட, அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை சார்பில் நடத்தப்பட்ட மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு பயிலரங்கத்தை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா துவக்கி வைத்து மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு கையேட்டினை வெளியிட்டு சிறப்புரை ஆற்றினார்.
அக்டோபர் மாதம் உலகம் முழுவதும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், மார்பகப் புற்றுநோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுவதன் அவசியத்தை வலியுறுத்துவதும் ஆகும்.