மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு சிறு தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் முகாம்
மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு சிறு தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் முகாம் மதுரை அக் 30 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பில் குறு சிறு தொழில் முனைவோர்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் முகாம் நடைபெற்றது. குறு, சிறு மற்றும் நடுதரத் தொழில் நிறுவனங்கள் துறை தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குனர் அவர்களின் அறிவுறுத்தலின்படியும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின் படியும் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் "கடன் வசதியாக்கல் முகாம்" மதுரை மாவட்ட தொழில் மையம் சார்பாக தொழில் முனைவோர்களுக்காக நடத்தப்பட்டது. இந்நிகழ்வு மதுரை மாவட்ட நபார்டு உதவிப் பொது மேலாளர் சக்தி பாலன் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்பிரஷாந்த் நாயக், மடீட்சியா இணை செயலாளர் பொன்குமார், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக மேலாளர் ராஜா, மதுரை "வாழ்ந்து காட்டுவோம் திட்ட மாவட்ட செயல் அலுவலர் சுந்தரபாண்டியன், மதுரை தாட்கோ அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மதுரை மாவட்டதில் உள்ள 12 பொதுத் துறை வங்கிகள் மற்றும் 2 தனியார் வங்கிகள் கலந்துகொண்டு 136 பயனாளிகளுக்கு ரூபாய் 13 கோடி 16 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டன..