Loading...

மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

A

Admin

October 01, 2026 • 07:02 AM

மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம்

மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் 


மத்தூர் அக்:2


கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், மறைந்த ஜீவா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவிகளுக்கான புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகச் சிறப்பான முறையில் நடைபெற்றது.

மத்தூர் மாநகர அரிமா சங்கம் மற்றும் தர்மபுரி விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இணைந்து நடத்திய இப்பள்ளி விழாவிற்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் அனந்திமாலா தலைமை தாங்கினார். முன்னதாக அரிமா தலைவரும், ஜீவா மளிகை ஸ்டோர் உரிமையாளருமான விஜயகுமார் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். இந்நிகழ்வில் மகாஜன சங்க மாநில செயலாளர் அரிமா மாதன், அரிமா அறக்கட்டளை தலைவர் மற்றும் பட்டய செயலாளர் அரிமா தனசேகரன், செயலர் (நிர்வாகம்) சண்முகம், செயலர் (சேவை) அன்பு ஸ்டுடியோ அன்பழகன், பொருளாளர் துரை, முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயலட்சுமி பெருமாள், .ராஜேந்திரன்,சரவணன், தாபா சிவா, சரவணன், சுரேஷ், ஒப்பந்ததாரர் சக்தி, மற்றும் விவசாயி பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தர்மபுரி விஜய் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரும், புற்றுநோய் மருத்துவ சிகிச்சை நிபுணருமான மருத்துவர் விஜயமுருகன், ஒற்றுமை மருத்துவ சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோய் பிரிவு மருத்துவர் தினேஷ் சுந்தர்ராஜன், மற்றும் பொதுநல மருத்துவர் கவி பிரியா மருத்துவ வல்லுநர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு.மாணவிகளிடம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, அதன் தடுப்பு முறைகள் மற்றும் நோயை ஆரம்ப காலத்திலேயே கண்டறிவது எப்படி என்பது குறித்து விரிவாக எடுத்துரைத்துச் சிறப்பித்தனர்.

இந்த இலவச மருத்துவ முகாமிலும், விழிப்புணர்வு நிகழ்ச்சியிலும் அப்பகுதி பொதுமக்களும், பள்ளியின் என்.எஸ்.எஸ் மாணவிகள் 50 பேருக்கு மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்துகொண்டு முழுமையாக பயனடைந்தனர்.மாணவிகளுக்கான இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கான சிறப்பான ஏற்பாடுகளை பள்ளியின் என்.எஸ்.எஸ் திட்ட அலுவலர் சென்னம்மாள் .சத்யா மற்றும் ஆசிரியர்கள் பெருமாள், வீரமணி, சத்யா ஆகியோர் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

- Advertisement -