மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.ஏ. சீனி அகமதுவுக்கு மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் வாழ்த்து
மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்ட எம்.ஏ. சீனி அகமதுவுக்கு மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் வாழ்த்து
மதுரை செப்டம்பர் ;30 மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான தமிம் அன்சாரி அவர்களால் கட்சியின் மாநிலச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எம்.ஏ. சீனி அகமது அவர்களுக்கு, மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மதுரை தெற்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ். அகமது பாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், எம்.ஏ. சீனி அகமது அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து, இனிப்புகள் வழங்கி, வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் தாஹா மைதீன், தெற்கு மாவட்ட செயலாளர் சையது ராஜா, தெற்கு மாவட்ட பொருளாளர் ரபிக் ராஜா, இளைஞர் அணி மாவட்ட துணைச் செயலாளர் எஸ். முகமது கைப், 47-வது வார்டு பொருளாளர் ப்ரோஸ் கான் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.