மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது டெங்கு தடுப்பு ஆய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் மரு. தாரேஸ் அகமது டெங்கு தடுப்பு ஆய்வு
மதுரை செப் 26
மதுரை மாநகராட்சி, மண்டலம் 3, வார்டு 50, சிம்மக்கல் எல்.என்.பி., அக்ரஹாரம் தெருவில் மேற்கொள்ளப்பட்டு வரும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேரில் ஆய்வு செய்து பார்வையிட்டார்.
தொடர்ந்து, வீடு வீடாகச் சென்று டெங்கு கொசு உற்பத்தியாகும் இடங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன், பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கி, சுற்றுப்புறத்தை தூய்மையாகவும் கொசு உற்பத்தியாகாத வகையிலும் பராமரிக்குமாறு அறிவுறுத்தினார்.
மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார் ஆகியோர் உடன் உள்ளனர்.