மலை மாவட்டத்தில் பெரு மழையால் ஏற்பட்ட நிலசரிவில் அரசு பேருந்து சிக்கியது ஓட்டுநர் பலியான நிலையில் பயணிகள் காயங்களுடன் பத்திரமாக மீட்பு
மலை மாவட்டத்தில் பெரு மழையால் ஏற்பட்ட நிலசரிவில் அரசு பேருந்து சிக்கியது ஓட்டுநர் பலியான நிலையில் பயணிகள் காயங்களுடன் பத்திரமாக மீட்பு
நீலகிரி அக் 25
வடகிழக்கு பருவமழை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தமிழக வானிலை அறிவிப்பின்படி மலை மாவட்டமான நீலகிரியில் தொடர்ந்து விடிய விடிய மழை பெய்து வருகிறது மாவட்டத்தில் அதிகபட்சமாக குன்னூரில் 250 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது இந்நிலையில் ஊட்டியிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற அரசு பேருந்து பர்லியார் எனும் இடத்தில் பழுதாகி நின்று விட்டது மற்ற பயணிகள் மாற்று பேருந்தில் ஏற்றிவிட்ட நிலையில் 6 பயணிகள் மற்றும் ஓட்டுநர் நடத்துனர் பேருந்தில் சாலையோரம் நிறுத்தி இருந்தனர் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து மீது விழுந்த மண் பாறைகள் பேருந்தை நசுக்கியது ஓட்டுநர் ஜனகராஜ் உயிரிழந்த நிலையில் பலத்த காயத்துடன் நடத்துனர் கேசவன் தப்பித்தார் உள்ளே சிக்கி இருந்த ஆறு பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்