Loading...

மாநகராட்சி அதிரடி அறிவிப்பு சொத்துவரி தொகையிலிருந்து 5 சதவீதம் சிறப்பு சலுகை

A

Admin

October 17, 2026 • 11:16 AM

மாநகராட்சி அதிரடி அறிவிப்பு  சொத்துவரி தொகையிலிருந்து 5 சதவீதம் சிறப்பு சலுகை

மாநகராட்சி அதிரடி அறிவிப்பு
சொத்துவரி தொகையிலிருந்து 5 சதவீதம் சிறப்பு சலுகை


மதுரை அக் :18


மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ஐந்து மண்டல அலுவலகம் 100 வார்டு பகுதிகளில் 2026-2027-ம் ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை 31.10.2026 தேதிக்குள் செலுத்தும் சொத்துவரி உரிமையாளர்களுக்கு சொத்துவரி தொகையில் 5% சிறப்பு சலுகை (அதிகபட்சமாக ரூ.5000/-) வழங்கப்படும். எனவே மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு 31.10.2026-க்குள் தங்களது சொத்து வரியினை செலுத்தி இச்சிறப்பு சலுகையினை பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், பொதுமக்கள் சொத்து வரிகளை செலுத்துவதற்கு வசதியாக (அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து) 2026 அக்டோபர் மாதம் முழுவதும் சனிக்கிழமை நாட்களில் மாநகராட்சியின் அனைத்து வரிவசூல் மையங்கள் செயல்படும் எனவும், மேலும், www.tnurbanepay.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் முறையிலும் சொத்துவரிகளை செலுத்தி சிறப்பு சலுகையினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார், தெரிவித்துள்ளார்.

- Advertisement -