மாபெரும் தூய்மை பணியாளர்கள் நல முகாம்!
மாபெரும் தூய்மை பணியாளர்கள் நல முகாம்!
அக் 01
தேனி மாவட்டம், தாமரைகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக் கூடத்தில், மாபெரும் தூய்மைப் பணியாளர்கள் நல முகாம் நடைபெற்றது.
இச்சிறப்பு நல முகாமில் தாமரைகுளம், தென்கரை, வடுகபட்டி, கெங்குவார்பட்டி மற்றும் ஆண்டிபட்டி ஆகிய பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் திரளாகப் பங்கேற்று, தங்களது பல்வேறு கோரிக்கைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் தொடர்பான மனுக்களை அளித்தனர்.
முகாமில், தூய்மைப் பணியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆதார் சேர்க்கை/திருத்தம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் தனித்தனியாகச் சிறப்பு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தூய்மைப் பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள், இணைய வழியில் உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டன. இம்மனுக்கள் மீது விரைந்து பரிசீலனை செய்யப்பட்டு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்ச்சியில், தாமரைகுளம் பேரூராட்சித் தலைவர் பால்பாண்டியன், தென்கரை பேரூராட்சித் தலைவர் நாகராஜ், தேவதானப்பட்டி பேரூராட்சித் தலைவர் முருகேஸ்வரி,வடுகபட்டி பேரூராட்சி தலைவர் நடேசன் , ராமையா, கெங்குவார்பட்டி பேரூராட்சித் தலைவர் தமிழ்செல்வி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்