மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம்
வேலூர் அக்-03
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில் வெற்றிப் பயணம் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் வெற்றிப் பயணம் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்வின்போது வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அ.கேத்திரின் சரண்யா, இ.ஆ.ப., கீ.வ.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் .ஏ.தென்றல்குமார், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) லிமிடெட் வேலூர் மண்டல பொது மேலாளர் சொர்ணலதா, வேலூர் வருவாய் கோட்டாட்சியர் .ராம்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.