மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கருவேலை மரங்களை அகற்றும் பணி துவங்கியது
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் வட்டம் ,நீர்வளத்துறையின் சருகனியாறு வடிநிலக்கோட்டத்திற்கு உட்பட்ட பனையனேந்தல் கண்மாயின் மொத்த பாசன பரப்பளவு 209 ஏக்கர் ஆகும் இக்கண்மாயின் உள் வாய்பகுதியில் அடர்த்தியாக இருந்த சீமைகருவேல முடசெடிகளை அகற்ற வேண்டி மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான சொக்கனாதிருப்பு க.கோபால் விவசாயிகளின் நலன் கருதி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதனை நிறைவேற்றும் விதமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் கருவேலை மரங்களை அகற்றும் பணி துவங்கியது.