மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் மதுரை
மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை குளிர்காப்பு பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் வழங்கும் திட்டம் மதுரை நவ 3 பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மீன் விற்பனையினை ஊக்குவித்திட ஏதுவாக மீனவப் பயனாளிகளுக்கு குளிர்காப்புப் பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனங்களை மானிய விலையில் வழங்கிடும் பொருட்டு சென்னை தமிழ்நாடு மாநிலத் தலைமை மீன்வள கூட்டுறவு இணையத்தின் வாயிலாக மதுரை மாவட்டத்திற்கு 12 அலகுகள் (பொது 11 மகளிர்-1) என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளான மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு மக்கள் குறை தீர்க்கும் கூட்ட நாளில் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் . நிஷாந்த் கிருஷ்ணா, வழங்கினார் . குளிர்காப்புப் பெட்டி பொருத்தப்பட்ட இரு சக்கர வாகனம் ஒன்றின் (அலகு) விலை ரூ.75,000/- என 12 அலகின் மொத்த விலை ரூ.9.00 லட்சத்தில் மானியம் பொது பிரிவிற்கு 40% மகளிர் பிரிவிற்கு 60% என 12 அலகுகளுக்கு மொத்த மானியத் தொகை ரூ.3.6 லட்சம் ஆகும். இந்நிகழ்ச்சியில் மதுரை (மண்டலம்) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் மகாசி நாதபாண்டியன், மதுரை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் மற்றும் மீன்வள ஆய்வாளர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.