Loading...

முதுகுளத்தூர் கிராமத்தில் என்.எஸ்.எஸ். 3-வது நாள் முகாம் உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவ முகாம்!

A

Admin

September 28, 2026 • 11:18 AM

முதுகுளத்தூர் கிராமத்தில் என்.எஸ்.எஸ். 3-வது நாள் முகாம் உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவ முகாம்!

முதுகுளத்தூர் கிராமத்தில்
என்.எஸ்.எஸ்.
3-வது நாள்
முகாம்
உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும்
கால்நடை மருத்துவ முகாம்!


முதுகுளத்தூர் செப்29:
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி என்.எஸ்.எஸ்.
சார்பில் மு.தூரி கிராமத்தில் 3-வது நாளில்
செப்டம்பர் 28-ல் உலக ரேபிஸ் நோய் விழிப்புணர்வு மற்றும் கால்நடை மருத்துவ முகாம்
பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் அருள்தாஸ்
முதுகுளத்தூர் தலைமை
யிலும்,
நாட்டுநலப்
பணித்திட்ட மாவட்ட
தொடர்பு அலுவலர் மங்களநாதன் முன்னிலை
யிலும்
நடைபெற்றது.
அனைவரை
யும் என்.எஸ்.எஸ்.
திட்ட அலுவலர்
தர்மராஜ்
வரவேற்றார். உலக ரேபிஸ் தினத்தை முன்னிட்டு
முதுகுளத்தூர் கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் ரவிச்சந்திரன், மாவட்ட விலக்குகள் நல அலுவலர் இளம்பருதி மற்றும் கால்நடை ஆய்வாளர் வீரன்
ஆகியோர் 20-க்கும் மேற்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினர்.
பின்பு வீட்டில் வளர்க்கும் நாய், பூனை போன்ற செல்லப்பிராணிகளுக்கு அவ்வப்போது தடுப்பூசி செலுத்த வேண்டும் எனவும் ரேபிஸ் பாதித்த நாய் கடியால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் அதற்கான தீர்வு குறித்தும் விளக்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் கால்நடை
களுக்கு
காணை நோய், குடற்புழு நீக்கம், உட்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர். பசு மாடுகளுக்கு சினை பரிசோதனை செய்தனர்.
இறுதியில் தமிழாசிரியர் ரஜியாபானு நன்றி கூறினார்.

- Advertisement -