Loading...

முத்துசெல்லாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

A

Admin

October 16, 2026 • 11:33 AM

முத்துசெல்லாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

முத்துசெல்லாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்

உதவி இயக்குநர் டாக்டர் சுந்தரமூர்த்தி துவக்கி வைத்தார்!

ராமநாதபுரம், அக்.17-
ராமநாதபுரம் மாவட்டம்
பரமக்குடி அருகில் முத்துசெல்லாபுரம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

பரமக்குடி கால்நடை பராமரிப்புத் துறையின் உதவி இயக்குநர் டாக்டர் சுந்தரமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.
டாக்டர் விக்னேஷ், டாக்டர் சந்தியா, கால்நடை ஆய்வாளர் பூபதி, கால்நடை பராமரிப்பு உதவியாளர் கீதா கலந்து கொண்டனர்.
இம்முகாமில் 52 மாடுகள், 420 ஆடுகள், 570 செம்மறி ஆடுகள், 12 நாய்கள் மற்றும் 405 கோழிகள் ஆகியவற்றிற்கு சிகிச்சை மற்றும் தடுப்பூசி பணி மேற்கொள்ளப்பட்டது.

- Advertisement -