மோடியிடம் 25 நிமிடம் பேசிய விஜய்... 1000 கோடி ஹவாலா பணம்... திகார் சிறைக்கு மாற்றப்படும் அன்பில் மகேஷ்...
மோடியிடம் 25 நிமிடம் பேசிய விஜய்... 1000 கோடி ஹவாலா பணம்... திகார் சிறைக்கு மாற்றப்படும் அன்பில் மகேஷ்... சமீபத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்து சென்ற பின்பு, தமிழக அரசியலில் பல அதிரடி சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. சட்டசபையில் என்ணயுடைய டேபிளில் 3 பைல் உள்ளது அதை தேவையில்லாமல் திறக்க வைத்து விடாதீங்க என முதல்வர் விஜய் பேசி இருந்தார், அதற்கு எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், உங்க கிட்ட 3 பைல் உள்ளது என்றால், தாராளமாக நடவடிக்கை எடுங்க , அந்த பைலை சீக்கிரம் திறங்க என்று உதயநிதி ஸ்டாலின் பேசி இருந்தார். இந்நிலையில் முதல்வர் கைவசம் இருக்கும் மூன்று பைலில், ஒரு பைல் கடந்த திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சகராக இருந்த அன்பில் மகேஷ் குறித்த பைல், மற்றொன்று நகராட்சி நிர்வாக துறையை கையில் வைத்து இருந்து கே என் நேரு குறித்த பைல் ஓன்று, மற்றொன்று பைல் எது என்பது மர்மமாகவே உள்ளது, அநேகமாக கடந்த திமுக ஆட்சியில் துணை முதல்வராக இருந்த உதயநிதி ஸ்டாலினின் பைலாக இருக்கலாம் என அந்த மூன்றாவது பைல் இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் தமிழகம் வந்தது பிரதமர் மோடி , தமிழ்கத்தில் கால் வைத்தது முதல் அவர் தமிழகத்தில் இருந்து டெல்லி திரும்பும் வரை பிரதமர் கூடவே இருந்தவர் முதல்வர் விஜய், இடையில் மோடி பங்கேற்ற ஒரே ஒரு நிகழ்வில் மட்டும் கலந்து கொள்ளாத விஜய், பிரதமர் மோடி டெல்லி செல்வதற்கு விமானம் நிலையம் வருவதற்கு சுமார் 30 நிமிடங்களுக்கு முன்பே விமானம் நிலையம் வந்தார். இதனை தொடர்ந்து விமானம் நிலையம் வந்த பிரதமர் மோடியை வழியனுப்பும் முன்பு சுமார் 25 நிமிடம் முதல்வர் விஜய் பேசி அந்த பேச்சு தான் தற்பொழுது அன்பில் மகேஷ் கைது வரையும் சென்று இருக்கிறது மேலும், அடுத்தடுத்து திமுக முன்னாள் அமைச்சர்கள் சுமார் 4 பேர் இன்னும் கைது செய்ய பட இருக்கிறார்கள் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது, மோடி - விஜய் இருவருக்கும் இடையில் நடந்து 25 நிமிட பேச்சுவார்த்தையில், சுமார் 15 நிமிடங்கள் திமுக முன்னாள் அமைச்சர்களின் ஊழல் குறித்து பேசப்பட்டு இருக்கிறது, அதில் திமுக ஆட்சி காலத்தில் பள்ளி கல்வி துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் தொடர்பான ஊழல் விவகாரம் பேசப்பட்டு இருக்கிறது, அன்பில் மகேஷ் விவகாரத்தில் சுமார் 1000 கோடிக்கு மேல் ஹவாலா பணம் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறது என்பதை கண்டு பிடித்துள்ளதாக பிரதமர் மோடியிடம் தெரிவித்த முதல்வர் விஜய். எங்கள் தரப்பில் இருந்து என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமா அதை எடுக்கிறோம், உங்கள் தரப்பில் ஹவாலா பணம் விவகாரம் தொடர்பாக அமலாக்க துறை மூலம் நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம், மாநில அரசு சார்பில் கைது செய்து சிறையில் அடைத்தால், எளிதாக ஜாமின் பெற்று வெளிய வந்து வழக்கை நடத்துவார்கள், அந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வந்து அவர்கள் தண்டனை அனுபவிக்க காலதாமதம் ஆகலாம். ஆனால் நீங்கான் நினைத்தால், அமலாக்கத்துறை மூலம் வழக்கு பதிவு செய்து சுமார் 1 வருடத்திற்கு மேல் அன்பில் மகேஷை வெளியில் வராமல் சிறையில் வைக்க முடியும் என முதல்வர் விஜய் தெரிவிக்க, அதற்கு மோடி நிச்சயமாக ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அன்பில் மகேஷ் விவகாரத்தில் அமலாக்கதுறை உள்ளே வந்தால், அன்பில் மகேஷை அமலாக்கத்துறை கைது செய்து திகார் சிறைக்கு அழைத்து செல்ல வாய்ப்புள்ளது. மேலும் அன்பில் மகேஷ் விவகாரத்தில் அடுக்கடுக்கான ஆதாரங்கள் சிக்கி இருப்பதால், விரைவில் இந்த வழக்கில் தண்டனை பெற்று தருவதற்கான வேளையில் தீவிரமாக இறங்கி இருக்கிறது தவெக அரசு என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.