ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் முதல் முறையாக மாநில அளவிலான நடைபெற்ற ஹாக்கி போட்டி
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் முதல் முறையாக மாநில அளவிலான நடைபெற்ற ஹாக்கி போட்டி
திருநெல்வேலி விசார்ட்ஸ் அணி முதல் பரிசு பெற்றது
ராமநாதபுரம், அக்.12-
ராமநாதபுரம் மாவட்டம்
இருமேனி, உச்சிப்புளி உஜ்ஜைனி ஹாக்கி கிளப் நடத்திய மாநில அளவிலான 7எஸ் ஹாக்கி போட்டி இருமேனி ஜமாஅத் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இதில் மாநில அளவில் இருந்து பத்து அணிகள் கலந்து கொண்டனர். அதில் முதல் பரிசை திருநெல்வேலி ஹாக்கி விசார்ட்ஸ் அணியினரும் இரண்டாம் பரிசை இராமநாதபுரம் டவுன் ஹாக்கி கிளப் அணியினரும் மூன்றாம் பரிசை விருதுநகர் ரெட் ரோஸ் ஹாக்கி கிளப் அணியினரும் பெற்றனர். இப்போட்டியின் பரிசளிப்பு விழாவில் இருமேனி ஜமாத் தலைவர் ஜனாப்.சீனி ஹபிபுல்லா, ஜனாப்.L.சரிபு அகமதுகனி, இஸ்லாமிய இளைஞர் அமைப்புத் தலைவர், தமிழ்நாடு வாணிபக் கழக மேற்பார்வையாளர் குமார வடிவேல், தி இன்டர்நேஷனல் மெட்ரிக் பள்ளி பொறுப்பாளர் மைனா முகமது கலந்து கொண்டனர்.
தலைமை விருந்தினர்களாக ஹாக்கி ராமநாதபுரம் ஹாக்கி சங்கத் துணை தலைவர் செல்லத்துரை அப்துல்லா, இராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா கே.பி.எம். நாகேந்திரசேதுபதி, இராமநாதபுரம் ஹாக்கி சங்க மாவட்ட செயலாளர் சேதுபதி, ராமநாதபுரம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் தினேஷ்குமார் கலந்து கொண்டனர்.
இப்போட்டியின் முதல் பரிசாக - ரூ.15,000/- த்தை சீனி மாரி தி.மு.க.பிரமுகர், பிள்ளைமடம் இரண்டாம் பரிசாக - ரூ.10,000/-த்தை இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர் இராஜாராம் பாண்டியன் மற்றும்
இருமேனி முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமார், மூன்றாம் பரிசான - ரூ.5,000/-த்தை கே.டி.ஆர் ஹாக்கி அகடாமி, - செயலாளரும் உடற்கல்வி இயக்குநர், செய்யது அம்மாள் கலைக் கல்லூரி சவேரியர், மூன்று போட்டிகளுக்கான கோப்பைகளை அன்பளிப்பாக மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ரமேஷ் மண்டபம் சிறந்த விளையாட்டு விரர்களுக்கான கோப்பைகளை அன்பளிப்பாக உடற்கல்வி இயக்குநர், அமிர்த வித்யாலயம் முருகபூபதி ஆகியோர் அர்ப்பணித்தார்கள்.
இப்போட்டிக்கான ஏற்பாட்டுகளை உஜ்ஜைனி ஹாக்கி கிளப் செயலாளர் சிரஞ்சீவி ஹாக்கி இராமநாதபுரம் துணைச் செயலாளர் தாமரைக்கண்ணன் செய்திருந்தனர்.