Loading...

ரோட்டரி மாவட்டம் 3212 – 2027–28 ஆண்டுக்கான ஆளுநர் தேர்வு டாக்டர் எபனேஷ் பென்சாமின் புதிய ஆட்சிக்குழு அறிமுகம்!

A

Admin

November 02, 2026 • 06:14 AM

ரோட்டரி மாவட்டம் 3212 – 2027–28 ஆண்டுக்கான ஆளுநர் தேர்வு டாக்டர் எபனேஷ் பென்சாமின் புதிய ஆட்சிக்குழு அறிமுகம்!

ரோட்டரி மாவட்டம் 3212 – 2027–28 ஆண்டுக்கான ஆளுநர் தேர்வு டாக்டர் எபனேஷ் பென்சாமின் புதிய ஆட்சிக்குழு அறிமுகம்! ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார்!! ராமநாதபுரம், நவ. 2- நாகர்கோவிலில் புதிய ஆளுநர் அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. ரோட்டரி மாவட்டம் 3212-ன் கீழ் செயல்படும் சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய ரோட்டரி மாவட்டத்தின் 2027–2028 ஆம் ஆண்டுக்கான ஆளுநராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நாகர்கோவிலைச் சேர்ந்த டாக்டர் எபனேஷ் பென்சாம் புதிய ஆட்சிக்குழு அறிமுக விழா மற்றும் புதிய ஆளுநர் அலுவலகத் திறப்பு விழா நாகர்கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. ரோட்டரி முன்னாள் மாவட்ட ஆளுநர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்தார். ரோட்டரி மாவட்ட ஆளுநர் காந்தி கிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்கு டாக்டர் செல்வம் தலைமை தாங்கினார். டாக்டர் சுரேஷ் பாலன் வரவேற்புரையாற்றினார். டாக்டர் ரேகா பெனசாம் மற்றும் பலர் குத்துவிளக்கேற்றினர். ஆளுநர் தேர்வு டாக்டர் எபனேஷ் பென்சாம் அவர்கள் உரையாற்றுகையில், ரோட்டரி மாவட்டம் 3212-ல் உள்ள 124 ரோட்டரி சங்கங்களின் ஒருங்கிணைப்புடன், மாவட்டத்தின் ஏழு பகுதிகளிலும் புற்றுநோய் தடுப்பு, பரிசோதனை மற்றும் விழிப்புணர்வுத் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். முன்னாள் மாவட்ட ஆளுநர் மீரான்கான் சலீம் அவர்கள் விளக்கவுரையாற்றினார். முன்னாள் மாவட்ட ஆளுநர் ஜேசையா வில்லவராயர் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் ஷாஜகான், டாக்டர் சண்முகம், ஆறுமுக பாண்டியன், ராஜகோபாலன், டாக்டர் விஜயகுமார், ஜெசிந்தா தர்மா, தினேஷ் பாபு, வருங்கால மாவட்ட ஆளுநர்கள் சண்முக நடராஜ், மயில் பாலசுப்பிரமணியம் மற்றும் தென்காசியைச் சேர்ந்த அழகர்ராஜா, சங்கரநாராயணன், ரவிச்சந்திர ராமவன்னி உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். மேலும், மாவட்டச் செயலாளர் நந்து, முன்னாள் துணை ஆளுநர்கள்,இராஜபாளையம் பீமானந், சண்முகராஜேஸ்வரன், வழக்கறிஞர் முனியசாமி, பேராசிரியர் அலாவுதீன், ரமேஷ்பாபு, வீரபூபதி, ரத்தினவேல், சஜன்சா, கேசவன், பாலமுருகன் மற்றும் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, பரமக்குடி, தொண்டி, சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ரோட்டரி நிர்வாகிகள், உறுப்பினர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் மாவட்டச் செயலாளர் தேர்வு பிரதாப் நன்றியுரை வழங்கினார். யூசுப் ராஜா, சரவணன் நிகழ்ச்சியை ஒருங்கிணத்தனர். புதிய ஆளுநர் அலுவலகத் திறப்பு விழாவும், புதிய ஆட்சிக்குழு அறிமுக விழாவும் ரோட்டரி மாவட்டம் 3212-ன் எதிர்காலச் செயல்பாடுகளுக்கு ஒரு புதிய தொடக்கமாக அமைந்தது.


- Advertisement -