Loading...

வள்ளலாரில் சுப்பிரமணியன் மருத்துவமனை திறப்பு விழா

A

Admin

October 21, 2026 • 03:50 AM

வள்ளலாரில் சுப்பிரமணியன் மருத்துவமனை திறப்பு விழா

வேலூர் மாவட்டம்


வள்ளலாரில் சுப்பிரமணியன் மருத்துவமனை திறப்பு விழா


வேலூர், அக் 21 -


வேலூர் மாநகரம் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதி 3 ஹரி ஓம் 2-வது தெருவில் சுப்பிரமணியன் மருத்துவமனை திறப்பு விழா மற்றும் பொது மருத்துவம் பல் மருத்துவ இலவச ஆலோசனை முகாம் நடைபெற்றது. முகாமை தோட்டப்பாளையம் அரசு நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியபாமா சுப்பிரமணியன் குத்து விளக்கு ஏற்றி முகாமினை தொடங்கி வைத்தார்‌.

இம்முகாமில் பொதுமக்களுக்கு சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் ரத்த சோகை வயிற்றுப்புண் முதுகு வலி மற்றும் தசை வலி தாய்மார்களுக்கான கர்ப்பகால பராமரிப்பு பிரசவகால கவனிப்பு குழந்தைகளுக்கான சிறப்பு பரிசோதனைகள் மற்றும் பல் பரிசோதனை பல்சுத்தம் பல் நிரப்புதல் வேர் சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ ஆலோசனை மற்றும் சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டது. பொது மருத்துவ பிரிவில் மருத்துவர் சாந்தினி சுப்பிரமணியன் பல் மருத்துவர் பிரிவை மெர்சி சாரா கேத்தரின் ஆகியோர் இலவச ஆலோசனை மற்றும் சிகிச்சைகளை வழங்கினர்‌. ஏராளமான பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர் மருத்துவ முகாமில் மருத்துவமனை நிர்வாகிகள் ஊழியர்கள்

மற்றும் மறைந்த ராணுவ சுபேதார்.சுப்பிரமணியன் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்

- Advertisement -