வாபஸ் வாங்குகிறது கம்யூனிஸ்ட்... தவெக அமைச்சரவையில் பாமக... விசிக வெளியேற்றம்.. தாராபுரம், மற்றும் மதுராந்தகம்
வாபஸ் வாங்குகிறது கம்யூனிஸ்ட்... தவெக அமைச்சரவையில் பாமக... விசிக வெளியேற்றம்..
தாராபுரம், மற்றும் மதுராந்தகம் சட்டசபை இடைதேர்தல் முடிவுக்கு பின்பு தமிழக அரசியலில் பல்வேறு மாற்றங்கள் அரங்கேற இருக்கிறது, குறிப்பாக வரும் டிசம்பர் மாதம் தமிழக சட்டசபையில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத தீர்மான கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மிக தீவிரமாக திமுக உடன் இணைந்து மறைமுகமாக இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேலை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை தவெக அரசுக்கு ஆதரவளித்து வந்த இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் அடுத்து தவெக அரசுக்கு எதிராக கொண்டுவரப்படும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்கவே அதிக வாய்ப்புள்ளது, காரணம் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் தவெகவுக்கு இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது, இதனால் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் இருக்கும் 4 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்கவே வாய்ப்புள்ளது.
இந்நிலையில் தற்பொழுது தவெக அரசுக்கான ஆதரவை கம்யூனிஸ்ட் கட்சிகள் வாபஸ் பெற்றால், பாமகவின் ஆதரவை பெறுவதற்கு பல வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது தவெக , அதன் ஒரு பகுதியாக தான் மதுராந்தகம் இடைதேர்தலில் பாமகவின் ஆதரவை தவெக கேட்டது, ஆனால் நேரடியாக தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடியாது என பாமக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தவெக தரப்பில் அதிமுகவுக்கு ஆதரவாக நீங்கள் பிரச்சாரம் செய்ய கூடாது என பமாகிவிடம் வைக்கப்பட்ட கோரிக்கையை தொடர்ந்து, நடைபெற்று கொண்டிருக்கும் இடைதேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என பகிரங்கமாக அறிவித்தது பாமக, இதுவே தவெக பாமக கூட்டணிக்கு அச்சாரம் விடும் விதத்தில் அமைந்து இருந்தது, இந்நிலையில் பாமக தரப்பில் இரண்டு அமைச்சர் பதவி கேட்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட பாமகவுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் கொடுத்தால் தவெக அரசுக்கு ஆதரவளிக்க தயார் என்றும், அதாவது இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் விசிகாவுக்கு 1 அமைச்சர் என்றால், நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் கைவசம் இருக்கும் பாமகவுக்கு 2 அமைச்சர்கள் என பாமக தரப்பில் கேட்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கான க்ரீன் சிக்னல் தவெக தரப்பில் இருந்து வந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் பாமக இருக்கும் கூட்டணியில் விசிக இடம் பெறாது என்று விசிக தரப்பில் வெளிப்படையாக தெரிவித்து விட்டார்கள், அதே நேரத்தில் விசிக இருக்கும் கூட்டணியில் பாமக இடம் பெறாது என தவெக தரப்பில் பாமக தெரிவித்து விட்டது, இப்படியான ஒரு சூழலில்,விசிக அல்லது பாமக இரண்டு கட்சிகளில் ஒரு கட்சிக்கு மட்டும் தான் தவெக வில் இடம் என்பது உறுதியாகி விட்டது, ஆனால் இரண்டு கட்சிகளில் எந்த கட்சி என்பதை தவெக தான் முடிவு செய்ய வேண்டும்.
இந்நிலையில் அடுத்தடுத்து வரும் உள்ளாட்சி தேர்தல், நாடாளுமன்ற தேர்தல்களில் வடமாவட்டக்களில் தவெக வெற்றிக்கும் பாமக வாக்கு வாங்கி மிக முக்கியம், அதே நேரத்தில் வாக்கு வாங்கி இல்லாத விடுதலை சிறுத்தை கட்சிகளை கழட்டி விடவும் முடிவு செய்துள்ளது அந்த வகையில் இடைதேர்தல் முடிந்த உடன் தவெக அமைச்சரவையில் ஏற்படும் மாற்றத்தில் பாமக உள்ளே வர இருப்பதும், விசிக வெளியேற இருப்பதற்கும் அதிக வாய்ப்புள்ளது.
மேலும் தவெக கூட்டணியில் இருந்து விசிக வெளியேற்றப்பட்டால் , விசிகாவுக்கு இருக்கும் ஒரே இடம் திமுக தான், அதனாலே சமீப காலமாக திமுகவை விமர்சனம் செய்யாமல் மௌனமாக இருந்து வரும் விசிக, திமுக,விடம் ஒரு சுமுகமான போக்கை கடை பிடித்து வருவதை பார்க்க முடிகிறது, அந்த வகையில் இடைதேர்தல் முடிவுக்கு பின்பு தமிழக அரசியலில் மிக பெரிய மாற்றம் உள்ளது என்பது மற்றும் உறுதியாகியுள்ளது .