Loading...

வெள்ளக்கல் நுண் உரம் செயலாக்க மையத்தை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்

A

Admin

October 01, 2026 • 02:28 PM

வெள்ளக்கல் நுண் உரம் செயலாக்க மையத்தை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்

வெள்ளக்கல் நுண் உரம் செயலாக்க மையத்தை பார்வையிட்ட மாநகராட்சி கமிஷனர்


மதுரை அக :2

மதுரை மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு-92, வெள்ளக்கல் நுண் உரம் செயலாக்க மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கௌரவ் குமார்,பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, உதவி ஆட்சியர் (பயிற்சி) சித்தார்த் போகர்னா, உடனிருந்தார்.
வெள்ளக்கல் நுண் உரம் செயலாக்க மையத்திற்கு வார்டு எண். 92 மற்றும் வார்டு எண். 100 ஆகிய பகுதிகளில் இருந்து பெறப்படும் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து நுண் உரம் செயலாக்க மையத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் ஆணையாளர் அவர்கள நுண் உர செயலாக்க மையத்தின் செயல்பாடு குறித்து பார்வையிட்டதுடன், இந்த மையத்திற்கு தினந்தோறும் கொண்டு வரப்படும் பழக்கழிவுகள் தொடர்பாக அலுவலர்களிடம் கேட்டறிந்ததுடன், நாள்தோறும் வீடுகளில் பெறப்படும் குப்பைகளை நான்கு வகைகளாக தரம் பிரித்து பெறும்முறைகள் குறித்து வீட்டின் உரிமையாளர்களிடம் எடுத்துரைத்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி இம்மையத்திற்கு கொண்டு வரப்படும் மக்கும் குப்பைகளை அதிகரித்து பெற்று அதிகளவில் உரம் தயாரித்திட உரிய மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். நடவடிக்கைகளை

அதனைத்தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளர் அவர்கள் நுண் உர செயலாக்க மைய வளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் உதவிப்பொறியாளர் .செல்வ விநாயகம் சுகாதார அலுவலர் திருமால், சுகாதார ஆய்வாளர்.அலாவுதீன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

- Advertisement -