7 நட்சத்திர ஆமைகள் வைத்திருந்த ஒருவர் வனத்துறையினரால் கைது
7 நட்சத்திர ஆமைகள் வைத்திருந்த
ஒருவர் வனத்துறையினரால் கைது
கன்னியாகுமரி அக்:13
கன்னியாகுமரி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் முனைவர் அன்பு அவர்கள் உத்தரவுப்படி உதவி வனப்பாதுகாவலர் மற்றும் உதவி இயக்குநர் ஸ்ரீவல்சன் வழிகாட்டுதலின் படி பூதப்பாண்டி வனச்சரக அலுவலர், பணியாளர்கள் பூதப்பாண்டி வனச்சரகம் லெவிஞ்சுபுரம் பகுதியில் தணிக்கை செய்து கொண்டிருந்தனர்
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த கோட்டாரை சேர்ந்த மோகன் மகன் முகேஷ் (வயது 28) என்பவரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவரிடம் 2 நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் லெவிஞ்சிபுரம் பகுதியில் தங்கி கூலி வேலை செய்வதாகவும் ஏற்கனவே 5 நட்சத்திர ஆமைகளை பிடித்து வைத்துள்ளதாகவும் மொத்தமுள்ள இந்த 7 நட்சத்திர ஆமைகளையும் விற்கலாம் என்ற எண்ணத்தில் பிடித்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்து நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து நாகர்கோவில் வன வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.