MLWA மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
MLWA மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
மதுரை செப்டம்பர் ;28
மதுரை ஆனையூர் பகுதியில் உள்ள MLWA மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக ஆனையூர் பகுதி காவல் நிலையம் அருகிலும், முதியோர் இல்லத்திலும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக ‘எம்மால் இயன்றது’ அமைப்பின் நிறுவனர் கண்ணன் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களிடையே மரங்களின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மரம் வளர்ப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மாணவர்களுடன் இணைந்து மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிகழ்ச்சியில் மாவட்ட தொடர்பு அலுவலர் நவநீத கிருஷ்ணன், மாவட்ட தொடர்பு அலுவலர் (பொறுப்பு) சாம்ராஜ் ஹாரீஸ், MLWA மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் அழகர் ராஜ், வீ த லீடர்ஸ் இயக்கத்தைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம், தருண் மற்றும் MLWA மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.