அதிவேக வாகனங்களைக் கட்டுப்படுத்த 'ஸ்பீடு ரேடார் கன்' அறிமுகம்
அதிவேக வாகனங்களைக் கட்டுப்படுத்த 'ஸ்பீடு ரேடார் கன்' அறிமுகம்:
மதுரை அக் :7
மதுரை மாவட்டத்தில் அதிக வேகத்தில் சென்று விபத்துகளை ஏற்படுத்தும் வாகனங்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க, அதிநவீன ஸ்பீடு ரேடார் கன் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடக்கமாக, மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஒத்தக்கடை நான்கு வழிச்சாலை சந்திப்பில் இப்பணியை . தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து, மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து முக்கிய நான்கு வழிச்சாலைகளிலும் இக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு ஓவர் ஸ்பீட் வழக்குகள் தீவிரமாகப் பதிவு செய்யப்பட உள்ளன.
வேக வரம்பு அமைப்பு:
சாலையோரம் ஸ்டாண்ட் மூலம் வைக்கப்படும் இக்கருவியில், அந்தந்தப் பகுதிகளுக்கான குறிப்பிட்ட வேக வரம்பு முன்கூட்டியே பிக்ஸ் செய்யப்படும்.
துல்லியமாக படம் பிடித்தல்:
நிர்ணயிக்கப்பட்ட வேகத்தைத் தாண்டிச் செல்லும் வாகனங்களை மட்டும் இது ஃபோகஸ் செய்து கேப்சர் செய்யும்.
கலர் புகைப்படம் மற்றும் விவரங்கள்:
வாகனத்தின் நம்பர் பிளேட்டுடன் கூடிய கலர் போட்டோ, வாகனம் கடந்த வேகம் மற்றும் நேரம் ஆகியவற்றுடன் கூடிய பிரிண்ட் அவுட்டை உடனடியாக வழங்கும்.
குரல் பதிவு:
வாகனத்தின் வேகம் வாய்ஸ் மூலமாகவும் பதிவு செய்யப்படும்.
இதன் மூலம் இ-சலான் மற்றும் நேரடி விசாரணை மூலம் ஓவர் ஸ்பீட் வழக்குகள் பதிவு செய்யப்பட உள்ளன. மதுரை மாவட்டத்தின் அனைத்து நான்கு வழிச்சாலைகளிலும் வேகத்தை கட்டுப்படுத்தி சாலை விபத்துகளை தடுக்கும்பொருட்டு விரிவுபடுத்தப்படவுள்ளன