Loading...

அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால்தான் கைது மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.

A

Admin

November 06, 2026 • 03:52 PM

அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால்தான் கைது மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.

அன்பில் மகேஷிடம் பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால்தான் கைது மதுரையில் அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி.


மதுரை நவ 6


மதுரை திருப்பரங்குன்றம் அடுத்துள்ள புளியங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கட்டடத்தை திறந்து வைப்பதற்காக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் வருகை தந்துள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில்;-


பயிர் கடன் தள்ளுபடி விரைவாக முதல்வர் உத்தரவு கிணங்க அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்தி முடிவுகள் எட்டப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை அறிவிக்கப்படும்.

அன்பில் மகேஷ் விசாரணை விவகாரம்?
எல்லோருக்கும் ஆதாரம் உள்ளது. அன்பில் மகேஷ் கலெக்ஷன் செய்து யார் எவ்வளவு கொடுத்தார்கள். பார்ட்டி பண்டை ஒவ்வொரு பள்ளிக்கும் குழந்தைக்கு பாதுகாப்பிற்காக எவ்வளவு கொடுத்தார்கள்.

இது ஒரு நாளில் நடைபெறும் பிரச்சனை இல்லை இரண்டு வருஷமாக நடைபெறும் கலெக்ஷன். ஆதாரபூர்வமாக கல்வி நிறுவனங்களில் இருந்து புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் யாருக்கு கொடுத்தார்கள் அதற்கான மணி டிரைவ் உள்ளது. ஆதாரம் உள்ளது.
இதில் புகாந்திரம் இருக்கு என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வு மழைக்காலங்களில் விவசாய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது இதனை கட்டுப்படுத்துவதற்காக அந்த துறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வெளிமாநிலங்களில் இருந்து இறக்குமதி வேலைகள் செய்து குறைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

வரும் தேர்தலில் திமுக வர முடியாது.. ஜெயிச்ச தொகுதிகள் கூட மீண்டும் 10 தொகுதி கூட ஜெயிக்க முடியாது..

மீண்டும் எப்போது தேர்தல் வந்தாலும் 200 தொகுதிகளில் தவெக கூட்டணி வெற்றி பெறும் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஆதாரம் இருப்பதால்தான் வழக்கு பதிவு செய்யப்படும் அவர்கள் ஊழல் செய்யப்படவில்லையா.? மக்கள் பணத்திற்கு கொள்ளையடித்துதான் இந்த இடத்தில் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாளும் காலை 9 மணியிலிருந்து நாளை 5:00 மணி வரை தலைமைச் செயலகத்தில் அனைவரையும் சந்தித்து வருகிறார்.

அதிகப்படியான பேருந்துகளை இயக்குவதற்கு அத்துறை அமைச்சர் ஒரு மாதமாக திட்டமிட்டு அடுத்த கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர் செயலி மூலமாக பேருந்து இயக்கத்தை தெரிந்து கொள்ளவும், ஒருங்கிணைத்து கட்டண கொள்ளை நடைபெறாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.

இந்த தீபாவளியில் அதிக மக்கள் செல்வதற்கான வழிவகை செய்யப்படும். புதிய பேருந்துகளும் வாங்கப்பட்டுள்ளது அடுத்த ஆண்டு கூடுதலாக்கப்படும்.

தீபாவளியன்று எந்த ஒரு மின்வெட்டும் இல்லாமல் இர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. போதுமான அளவுக்கு ஆய்வு செய்து தேவையில்லாமல் பவர் கட் செய்யக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.. அப்படி இருந்தால் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

அரசியலில் அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் செயல்படுகிறார்கள். லஞ்சம் குறைந்து வருகிறது.

அன்பில் மகேஷிடம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால்தான். கைது செய்யப்பட்டுள்ளது.. வீட்டில் சென்று பணம் கொடுத்ததற்கான ஆதாரம் இருப்பதால் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அவ்வளவு ஆதாரங்கள் இல்லாமல் காவல்துறை கைது செய்திருக்க மாட்டார்கள்..

கூட்டணி கட்சியுடன் முழு ஒத்துழைப்புடன் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது அனைவரும் சேர்ந்து மக்களுக்கு நல்ல முறையில் செய்து வருகிறோம், என்றார்.

- Advertisement -