Loading...

அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவகம் நடத்துவதை நீதிமன்றம் கண்டித்துள்ளது

A

Admin

October 16, 2026 • 02:26 AM

அரசு மருத்துவர்கள் தனியாக மருத்துவகம் நடத்துவதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.

சென்னை அக் 17

பல அரசு மருத்துவ மனைகளில் மருத்துவர்கள் இல்லாததால் ஆயிரக்கணக்கான நோயாளிகள் பெரும் பாதிப்பு அடைகின்றனர் என்றும் அதுவே உயிரிழப்புகளுக்கு காரணமாகிறது என்றும் செய்திகள் வருகின்றன.
1420 அரசு மருத்துவர்கள் பணிக்கு வரவில்லை என்கிறத் தகவலை அரசே சொல்வது நமக்கு பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த கவலையும் அளிக்கிறது.
அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் இல்லாததால், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஆபத்தான நிலையில் அவசர மருத்துவ உதவிகளுக்காக (சிகிச்சைக்காக) வரும் நோயாளிகள் பலரும் வேறு வழியின்றி தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர்.
அவசர மருத்துவம் கருதி (சிகிச்சைக்காக) அரசு மருத்துவ மனைகளை நாடும் ஏழைகளுக்கு இது கூடுதல் நிதிச்சுமையாக மாறுகிறது.
மத்திய மாநில அரசுகள் எந்த நோக்கத்திற்காக பெரும் நிதிகள் முதலீட்டில் அரசு மருத்துவ மனைகளை நடத்தி ஏழைகளுக்கான இலவச மருத்துவப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவைகள் அனைத்தும் "விழலுக்கு இரைத்த நீராகப் பாய்வதை" எந்த மனித உரிமை ஆர்வலர்களும் வேடிக்கைப் பார்க்க முடியாது. இதற்கு காரணமாக இருக்கும் அரசுப் பணி மருத்துவர்களை இனம் கண்டு அவர்களை நிரந்தரப் பணி நீக்கம் செய்ய வேண்டும்.
அரசியல்வாதிகளும் தலைவர்களும் இதனை வேடிக்கைப் பார்க்கக் கூடாது, உப்பு சப்பில்லாதக் கருத்துகளை சொல்லி விட்டு ஒதுங்கிக் கொள்வது சமூகப் பொறுப்பில்லாத் தனமாகும்.
ஆளும் கட்சிகளைச் சார்ந்தவர்கள், அரசியல் வாதிகள், சமூகப் பொறுப்புள்ள மக்கள் தலைவர்கள் மற்றும் மக்கள் பணியாளர்கள் முன்னோடிகளாக இருக்க தங்களது மருத்துவத்திற்காக ( சிகிச்சைக்காக) அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வதை வழக்கமாகக் கொள்ள வேண்டும்.
மருத்துவ மனைகளில் முறையான மருத்துவ பராமரிப்புகள் சிகிச்சை தரப்படுகிறதா, மருத்துவர்கள் பணிக் களத்தில் இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் அரசு மருத்துவர்களுக்கு அச்சம் வரும் இல்லை என்றால் அவர்கள் எப்போதும் போல தனி மருத்துவகங்களை வைத்துக்கொண்டு தனி அரசாங்கம் நடத்தி காசு பார்ப்பதையே தொழிலாகக் கொள்வார்கள். இவர்களுக்கு கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.!

- Advertisement -