Loading...

அரவைதிறன் குறைவு காரணமாக அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை யில் ரூபாய் 28.13 கோடி நஷ்டம்

A

Admin

September 30, 2026 • 02:43 PM

அரவைதிறன் குறைவு காரணமாக அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை யில் ரூபாய் 28.13 கோடி நஷ்டம்

அரவைதிறன் குறைவு காரணமாக அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை யில் ரூபாய் 28.13 கோடி நஷ்டம்
தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவர் கண்ணன் பேச்சு

தஞ்சாவூர் அக்டோபர் 1
அரவைதிறன் குறைவு காரணமாக அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் ரூபாய் 28.13 கோடி நஷ்டம் ஏற்பட்டது என தமிழ்நாடு சர்க்கரை கழக தலைவர் பேசினார்
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை சார்பில் தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் 51 வது பேரவை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் ரேவதி முன்னி லை வகித்தார் .சென்னை சர்க்கரை துறை ஆணையரும், தமிழ்நாடு சர்க்கரைக் கழக தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருமான கண்ணன் தலைமை தாங்கி பேசினார் .அப்போது அவர் கூறிய தாவது,;
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் 2025- 26 ஆம் ஆண்டு அரவைப்பருவத்தில் சுமார் 1 லட்ச த்து 29 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்து 10 ஆயிரத்து 261 டன் சர்க்க ரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடு கையில் கரும்பு அளவில் சுமார் 3 ஆயிரத்து90 டன் அதிகமாக அரவை செய்யப்பட்டுள்ளது
2026-27 ஆண்டு அரவை பருவத் தில் 1 லட்சத்து 30 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்து சுமார் 10 ஆயிரத்து400 டன் சர்க்கரை உற்ப த்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டு, ஆலையின் அரவை டிசம்பர் 11ஆம் தேதி தொடங்க உத்தேசிக்க ப்பட்டுள்ளது .2026-27 ஆம் ஆண்டு நடவு பருவத்தில் 14 ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பை இலக்காக கொண்ட கரும்பு உற்பத்தியை பெருக்க ஆலை நிர்வாகம் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறது.
அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கடந்த 2025 -26ஆம் ஆண்டு நிதியாண்டில் ஏற்பட்ட
நஷ்டம் ரூபாய் 28 கோடி 13 லட்சம் ஆகும் .ஆனால் 2024-25 நிதியாண் டில் 37 கோடியே 87 லட்சம் இருந்தது நிர்ணயிக்கப்பட்ட அரவை திறனை விட குறைவாக அரவைசெய்ததாலு ம் ,சர்க்கரை கட்டுமான குறைவும், நஷ்டத்திற்கு முக்கிய காரணங்கள் ஆகும். உற்பத்தி செலவினங்களை கட்டுப்படுத்தவும், கடன்களை மறுசீரமைத்து ஆலையின் நிதி நிலை மேம்படுத்தவும், நிர்வாகம் தொடர் நடவடிக்கையை எடுத்து வருகிறது .இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் நிறும செயலாளர் சங்கரலிங்கம் ,தமிழக கவர்னரின் பிரதிநிதியும், கூடுதல் சர்க்கரைத் துறை இயக்குனருமான பாலமுரு கன் ,தமிழ்நாடு சர்க்கரை கழக பொது மேலாளர் பால்பிரண்ட்ஸ்லி ராஜ்குமார், தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை துறை இணை செயல் கலெக்டர் ரமணிதேவி, குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாகி ராமன், வேளா ண்மை இணை இயக்குனர்கள் சுந்தர மகாலிங்கம் (புதுக்கோட்டை) சாருமதி (தஞ்சாவூர்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்

- Advertisement -