அவதூறு பரப்புபவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அவதூறு பரப்புபவர்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிவகங்கை எம். எல். ஏ - போலீஸ் எஸ். பி -யிடம் பரபரப்பு புகார்.
சிவகங்கை:நவ:06
சிவகங்கைத் தொகுதி எம்.எல்.ஏ குழந்தைராணி நாச்சியார் தனது கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தார். பின்னர் அவர் போலீஸ் எஸ்.பி யிடம் புகார் மனுவை கொடுத்தார்.
மனுவில் கூறியிருந்ததாவது: தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி என்பது கமிஷன் , கரப்ஷன் இல்லாத வெளிப்படையான தூய்மையான ஆட்சி என்பதை மக்கள் அறிவார்கள். தற்போது யூனியன் அலுவலகம் மூலம் கிராம வளர்ச்சிக்கான திட்டப்பணிகள் தொடங்க இருக்கிறது.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த சில ஒப்பந்ததாரர்கள்
சிவகங்கை எம்.எல்.ஏ கமிஷன் கேட்டதாக தவறான அவதூறுகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதை அறிகிறேன். இவ்வாறு எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பொய்யான அவதூறுகளை திமுகவைச் சேர்ந்த ஒப்பந்ததாரர்களும் வேறு சிலர்களும் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும்.
தமிழக முதல்வர் காட்டியுள்ள வழிகாட்டுதலின் படி அமைதியாக மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் என் மீது தேவையற்ற அவதூறு பரப்புபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இது குறித்து காவல்துறை சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.