ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் கொண்டாட்டம். கால்வாயில் பனை விதைகளை நடவு செய்தனர்
ஆலங்குளம் அரசு மகளிர் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட நாள் கொண்டாட்டம். கால்வாயில் பனை விதைகளை நடவு செய்தனர்
ஆலங்குளம், செப்.25- கல்லூரிக் கல்வித் துறை - திருநெல்வேலி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்ககம்-அனைத்து அரசு அரசு/அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் - தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணித்திட்டக்குழுமம் - செப்டம்பர் 24 ஆம் நாள் நாட்டு நலப்பணித்திட்ட -நாளாக கொண்டாடுதல் மாநில நாட்டு நலப்பணித்திட்டம், கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, எக்ஸ்னோரா இண்டர் நேஷனல் அமைப்பு, மற்றும் தன்னார்வ அமைப்புகள் இணைந்து ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அரசு மகளிர் மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆலங்குளம் அரசு மகளிர் மற்றும் நேட்சர் டாக்கீஸ் இணைந்து கல்லூரி வளாகம் மற்றும் ஆலங்குளம் கால்வாயில் நாட்டு நலப்பணி திட்டமாணவிகள் பனை விதைகளை நடவு செய்தனர்.
முன்னதாக கல்லூரியில் பனை மரம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் செந்தில் மணிகண்டன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் தீபா தலைமையுரை ஆற்றினார் ஆலங்குளம் பசுமை முன்னோடி இளங்கோ சிறப்புரை ஆற்றினார் .இயற்கை ஆர்வலர்கள் யோகேஸ்வரன், அன்பழகன் மற்றும் கல்லூரி விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர் நிறைவாக கெளவர விரிவுரையாளர் ஆனந்த வள்ளி நன்றியுரை ஆற்றினார்.