Loading...

இராஜகம்பீரம் கிராமத்தல் அமைந்துள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் புதிய மின் மாற்றி

A

Admin

November 05, 2026 • 06:21 AM

இராஜகம்பீரம் கிராமத்தல் அமைந்துள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் புதிய மின் மாற்றி

இராஜகம்பீரம் கிராமத்தல் அமைந்துள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் புதிய மின் மாற்றி


மதுரை நவ 5

மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மதுரை கிழக்கு தாலுகா, ஒத்தக்கடை ஊராட்சியில், இராஜகம்பீரம் கிராமத்தல் அமைந்துள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்திற்கான ஒத்தக்கடை 110/11கிவோ உபமின்நிலையத்தில் இருந்து அதனை சுற்றியுள்ள பகுதிகளான ஒத்தக்கடை. நரசிங்கம், விவசாய கல்லூரி, திருமோகூர், புதுத்தாமரைப்பட்டி, கடச்சனேந்தல், காதக்கிணறு, புதுப்பட்டி, ஜாங்கி்ட்நகர். அழகர் கார்டன். சுந்தரராஜன்பட்டி, அம்மாபட்டி, காளிகாப்பான், வீரபாஞ்சான், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை ஆகிய பகுதிகளுக்கு, ஏற்கனவே நிறுவப்பட்ட எண்ணம் 110/11கிவோ மின்னழுத்தம், 10 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றிகளிலிருந்து, இதுவரையிலும் மின்சாரம் வழங்கப்பட்டு வந்த நிலையில்
ஒத்தக்கடை, கடச்சனேந்தல், காதக்கிணறு, கருப்பாயூரணி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் உள்ள மின்நுகர்வோர்களின் மின்பயன்பாடானது அதிகரித்துள்ள நிலையில் மொத்த மின் பளுவானது அங்கு நிறுவப்பட்டுள்ள ஒரு 10எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றியின் மின்பளுவினை விட கூடுதலாக இருப்பது உணரப்பட்டு, மேற்கண்ட பகுதிகளுக்கு மாற்று மின்னோட்டமானது அவசர ஏற்பாடாக வழங்கப்பட்டு வந்தது.
பொதுமக்களின் நலன் கருதி, மேற்கண்ட குறைபாடுகளை சரி செய்திட, 10 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றி 16 எம்.வி.ஏ-வாக தரம் உயர்த்திட சுமார் ரூ.344/- இலட்சம் செலவில், வாரிய அனுமதி பெறப்பட்டு, புதிதாக 110/11கிவோ மின்னழுத்த, 16எம்.வி.ஏ திறன் மின்மாற்றியானது ஒத்தக்கடை உபமின்நிலையத்தில் நிறுவப்பட்டு, முதல் பொதுமக்களுக்கு தடையில்லா மற்றும் சீரான மின்சாரம் வழங்கிட பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்கண்ட திறன் உயர்த்திய மின்மாற்றியிலிருந்து. சென்னை உயர்நீதிமன்றம். மதுரைக்கிளை வளாகத்தில் 240எண்ணம் மின்நுகர்வோர்களும், ஒத்தக்கடை, நரசிங்கம். விவசாய கல்லூரி ஆகிய பகுதிகளில் உள்ள 15143 எண்ணம் மின்நுகர்வோர்களும், 968611 7606 எண்ணம் திருமோகூர், புதுத்தாமரைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்நுகர்வோர்களும், கடச்சனேந்தல், காதக்கிணறு, புதுப்பட்டி. ஜாங்கிட்நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 1114 எண்ணம் மின்நுகர்வோர்களும், என மொத்தம் 34,103 எண்ணம் மின்நுகர்வோர்கள் பயன்பெறுவர் என்பதனை மதுரை மின்பகிர்மான வட்டம். தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது

மேற்கண்ட புதிய 110/11கிவோ மின்னழுத்த. 16எம்.வி.ஏ ' திறன் மின்மாற்றியானது பொறியாளர் பத்மாவதி, தலைமை பொறியாளர், பகிர்மானம், மதுரை மண்டலம் அவர்கள் தலைமையிலும், மேற்பார்வை பொறியாளர் மதுரைமின்பகிர்மான வட்டம் (பொறுப்பு) அவர்கள் முன்னிலையிலும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேற்கண்ட நிகழ்வில் செயற்பொறியாளர் கிழக்கு மதுரை. செயற்பொறியாளர் மின்உணர்த்தி ஆய்வு மற்றும் சிறப்பு பராமரிப்பு பணி, ஒத்தக்கடை உப கோட்ட அலுவலர்கள் மற்றும் மின்உணர்த்தி ஆய்வு மற்றும் சிறப்பு பராமரிப்பு பணி ஆகியோரும் கலந்து கொண்டனர்

- Advertisement -