Loading...

இராமநாதபுரத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு

A

Admin

October 21, 2026 • 03:46 AM

இராமநாதபுரத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு

இராமநாதபுரத்தில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே. ராஜீவ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு


இராமநாதபுரம் அக்-21 

இராமநாதபுரம் நகராட்சி, சக்கரக்கோட்டை ஊராட்சி மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டிணம்காத்தான் ஊராட்சி பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் வி.கே ராஜீவ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.


இராமநாதபுரம் நகராட்சி கேணிக்கரை, இரயில்வே பீடர் சாலை, இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சியில், நேரு நகர், மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியம், பட்டிணம்காத்தான் ஊராட்சியில் பாரதி நகர், ஓம் சக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை பார்வையிட்டு ஆய்வு செய்து, கூறியதாவது.


இராமநாதபுரம் மாவட்டத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, பொது சுகாதாரத் துறை, நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து மேற்கொண்ட பணிகளின் காரணமாக, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீர் படிப்படியாகக் குறைந்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பின் படி தொடர்ந்து மழை பெய்யக்கூடும் என்பதால், அனைத்துத் துறை அலுவலர்களும் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருந்து, மழை பாதிப்புகள் ஏற்படக்கூடிய பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என தெரிவித்ததுடன், தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, மழையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.


மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளவும், சக்கரக்கோட்டை ஊராட்சியில், நேரு நகர் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் வி.கே.ராஜீவ் அறிவுறுத்தினார்.


இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீ நிகம், இராமநாதபுரம் நகராட்சி ஆணையர் கண்ணன் , இராமநாதபுரம் வட்டாட்சியர் பழனிக்குமார் இராமநாதபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சோமசுந்தரம் அவர்கள், நெடுஞ்சாலைத்துறை மண்டலப் பொறியாளர், பொறியாளர்கள மற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- Advertisement -