இளம் வழக்கறிஞர்கள் ரீல்ஸ் மோகம் தவிர்க்க வேண்டும் பட்டமளிப்பு விழாவில் நீதியரசர்கள் பேச்சு!
இளம் வழக்கறிஞர்கள் ரீல்ஸ் மோகம் தவிர்க்க வேண்டும்
பட்டமளிப்பு விழாவில் நீதியரசர்கள் பேச்சு!
சேலம் செப் 30
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் 29 வது பட்டமளிப்பு விழாவில் உயர்நீதிமன்ற நீதியரசர்கள் உரையாற்றினர்.
சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியில் மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு இளங்கலை சட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளுக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சுமார் 380 க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் இந்நிகழ்வில் பட்டம் பெற்றனர்.
இந்நிகழ்வில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் மாண்புமிகு முனைவர். பெ.முருகன் மற்றும் நீதியரசர் கார்த்திகேயன் மற்றும் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைகழகத்தின் முன்னாள் துணை வேந்தர் முனைவர். எஸ்.எஸ்.பி.தார்வேஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கி வாழ்த்தினர்.
விழாவில் சேலம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பாரதிராஜன். குற்றவியல் நீதிபதி அப்துல் சலாம். உரிமையியல் சார்பு நீதிபதி .மனோகரன். குற்றவியல் நீதிபதி முத்துகிருஷ்ணன் முரளிதாஸ். குற்றவியல் நீதிபதி.எஸ்.பூவராகவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
விழாவில் தலைமையுரை ஆற்றிய சேலம் சென்ட்ரல் சட்டக்கல்லூரியின் தலைவர்சரவணன் தனபாலன் அவர்கள் கூறுகையில், இந்த கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் உயர்நீதிமன்ற நீதியரசர்களாக வேண்டும் என்ற நிறுவனர் தனபாலன் கனவு இன்று நனவாகியுள்ளது. குறிப்பாக இன்று வருகை தந்து சிறப்பித்துள்ள இந்த இரண்டு நீதியரசர்களையும் உள்ளடக்கி, இக்கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 7 பேர் இன்று மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்களாகியுள்ளதை குறிப்பிட்டு.. அவர்களுள் 2 நீதியரசர்கள் இன்று இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது என்று குறிப்பிட்டு தனது உரையை தொடங்கினார்.
நிறுவனரின் கனவு மெய்பட்டதை போல.. தனக்கும் ஒரு கனவு உள்ளது..! இக்கல்லூரியின் மாணவர்கள் இந்திய உச்சநீதிமன்ற நீதியரசர்களாக வேண்டும் என்பதே தனது கனவு. அந்த கனவு நிச்சயமாக இங்கு கூடியுள்ள பட்டதாரிகளால் மெய்படும் என்ற நம்பிக்கையை தெரிவித்தார்.
மேலும்... கல்லூரி படிப்பை தாண்டி.. நீதிமன்ற நுணுக்கங்களை மாணவர்கள் மூத்த வழக்கறிஞர்களிடமிருந்து மட்டுமே கற்றுக்கொள்ள முடியும் என்று பேசிய திரு.சரவணன் தனபாலன் அவர்கள்.. இக்காலத்தில் இளம் வழக்கறிஞர்கள் பட்டப்படிப்பை முடித்தவுடன் சுயமாக வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடுவதை மேற்கோள் காட்டி.. வெற்றி ஒரே இரவில் கிடைப்பதல்ல... மூத்த வழக்கறிஞர்களின் வழிகாட்டுதலுடன் இணைந்த தொடர்ச்சியான கற்றல் தான் வழக்கறிஞர் தொழிலில் வெற்றிக்கு அடித்தளம் என்றார்.
தொடர்ந்து, மாண்புமிகு கார்த்திகேயன் அவர்கள் சிறப்புரையாற்றினார். மேலும், இக்கல்லூரியின் மாணவராக இருந்தபோது ஒழுக்கத்துடன் கூடிய சட்டக்கல்வி போதிக்கப்பட்டதை நினைவு கூர்ந்து பேசிய நீதியரசர் இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டமளிப்பது மகிழ்ச்சியை தருகிறது என்றார்.